சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்
ADDED :3101 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில், தில்லைக்காளியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. வைகாசிப் பெருவிழா கடந்த 16ம் தேதி விநாயகர் பூஜை, காப்பு கட்டி உற்சவம் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. 9ம் நாள் உற்சவமாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி, காலை தில்லைக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 7:00 மணிக்கு புறப்பாடு செய்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:00 மணிக்கு அம்மன் தேரில் இருந்து இறங்கும் ரத அவரோகனம் நடந்தது. இன்று பகல் 1:00 மணிக்கு சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.