அனுமந்த வாகனத்தில் காஞ்சி வைகுண்டர் வீதியுலா
ADDED :3394 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள், அனுமந்த வாகனத்தில் வீதிஉலா வந்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் பிரம்மோற்சவம், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை, சப்பரம் வாகனத்திலும், இரவு, சிம்ம வாகனத்திலும், வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 3ம் நாள் உற்சவமான, 23ம் தேதி காலை, கருட சேவை உற்சவம் நடந்தது. இரவு, அனுமந்த வாகனத்தில், பெருமாள் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும், உற்சவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.