காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் வெள்ளித்தேர் பவனி
ADDED :3101 days ago
காஞ்சிபுரம: காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமி வெள்ளித்தேரில் பவனி வந்தார். காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் குமர கோட்டம் உள்ளது. இக்கோவிலில், வாரந்தோறும், செவ்வாய் கிழமை இரவில், கோவில் உட்பிரகாரத்தில், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, வெள்ளித்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த செவ்வாயன்று, வள்ளி, தெய்வானையருடன், சுப்பிரமணிய சுவாமி, வெள்ளித்தேரில் பவனி வந்தார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், வழக்கத்தை விட, ஏராளமான பக்தர்கள் தங் கள் குழந்தைகளுடன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.