உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட பக்தர்கள்

வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட பக்தர்கள்

வால்பாறை: சுப்ரமணியசாமி கோவிலில் நடந்த பிரதோஷபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஷ்வநாதர் கோவிலில்,  நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர்  மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.  பிரதோஷபூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும்,  நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிசேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபராதனை காட்டப்பட்டது.  இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவலோகநாத உற்சவ மூர்த்தி நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில்களில்  பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !