உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி வைபவம்

திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி வைபவம்

நாகை: சீர்காழி வட்டம், திருநாங்கூர் மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி வைபவம் 26.5.17 அன்று நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலை 6.30 - 8 மணிக்குள் பன்னிரு சிவனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு பன்னிரு சிவ பெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி,  மதங்க மகரிஷிக்கு  பன்னிரு ரிஷபாரூடராய் திருக்காட்சி தருகிறார். அதை தொடர்ந்து வீதி உலா டைபெறும். இந்த வைபவம் ஆண்டு தோறும் வைகாசி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !