உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 லட்சம் காணிக்கை

வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 லட்சம் காணிக்கை

ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, ஜன., மாதம் நடந்தது. திருவிழாவுக்குப் பின், கடந்த பிப்., மாதத்தில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பின், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. ஒரு லட்சத்து, 3,988 ரூபாய், ரொக்கம், 14.1 கிராம் தங்கம், 114.5 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் எண்ணிக்கையின் போது, பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், ஆய்வாளர் பாலசுந்தரி, செயல்அலுவலர் ராஜா ஆகியோர் இருந்தனர். ஜூன், 30க்குள் அனைத்து கோவில் உண்டியல்களையும் எண்ணி முடிக்க வேண்டும் என, அறநிலையதத்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், படிப்படியாக அனைத்து கோவில் உண்டியல்களும் குறிப்பிட்ட தேதிக்குள் எண்ணி முடிக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !