உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைக்காக குள தெய்வ வழிபாடு: பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள்

மழைக்காக குள தெய்வ வழிபாடு: பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள்

பொள்ளாச்சி: மழை வேண்டி, கோதவாடி குளத்தை சுற்றியுள்ள ஐந்து கோவில்களில், மூன்று கிராம மக்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை  செய்தனர். கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோதவாடி, வடசித்துார், பனப்பட்டி பகுதிகளில் போதிய அளவு மழை  பெய்யவில்லை.  தற்போதைய மழை விதைப்புக்கு பற்றாக்குறையாக உள்ளது என, கூடுதல் மழை பொழிவை வழங்கிட கேட்டு,   கோதவாடி, கொண்டம்பட்டி, குருநல்லபாளையம் மக்கள் நேற்று குளத்தை சுற்றியுள்ள கோவில்களில் பொங்கலிட்டு, சிறப்பு பூஜை  நடத்தினர். முன்னதாக, குளத்தை சுற்றியுள்ள விநாயகர், காளியம்மன், பழனிஆண்டவர், கன்னிமார், முனியப்பன், வளையல்கார  வஞ்சியம்மன் கோவில்களில் பொங்கலிட்டனர். அப்போது, இப்பகுதியில் நல்லமழை பொழிவை கொடுத்து, மக்களையும், விவசாயம்,  கால்நடைகளை வளம் பெற செய்து அருள வேண்டும் என வேண்டுதல் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !