மயிலம் முருகர் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா
ADDED :3086 days ago
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், மலைக் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தும், நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.