உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பு மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED :3090 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் விநாயகர் கோயில் முகப்பில் மண்டபம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சிறப்பு மிக்க இந்த விநாயகருக்கு சதுர்த்தி விழாவின் போது சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுவதால், இந்த விநாயகர் கோயில் பிரசித்திபெற்று விளங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் முகப்பு மற்றும் பக்கவாட்டில் ஓட்டு கொட்டகையால் தாழ்வாரம் அமைக்கப்பட்டிருந்தன. பழமை வாய்ந்த இந்த ஓட்டு கொட்டகை சேதமடைந்ததால் மழை காலங்களில் பக்தர்கள் சிரமமடைந்து வந்தனர். இந்நிலையில் சேதமடைந்த ஓட்டு கொட்டகைகளைஅகற்றிவிட்டு கிராமத்தார்கள் சார்பில் கோயில் முகப்பில் புதிதாக மண்டபம் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.