உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாங்கொளத்துாரில் பிரம்மோற்சவம்

பாங்கொளத்துாரில் பிரம்மோற்சவம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பாங்கொளத்துார் மன்னாத சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா 28ம் தேதி துவங்குகிறது.  விழாவையொட்டி,  இரவு 7:30 மணியளவில், சுப்ரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணமும், மறுநாள் (29ம்  தேதி) பகல் 12:00 மணிக்கு வாழ்முனீஸ்வரருக்கு பாதபூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து 30ம் தேதி காலை  7:00 மணிக்கு தீமிதித்தலும், வசந்த உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்,  ஊர் முக்கியஸ்தர்கள் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !