655 அடி ஆழத்தில் தண்ணீர்: மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மக்கள் மகிழ்ச்சி
ADDED :3158 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், கடும் வறட்சி நிலவுவதால், பல இடங்களில், 1,000 அடி போர்வெல் அமைத்தாலும், தண்ணீர் இன்றி, புகை மட்டும் வருகிறது. சமீபத்தில், அம்மாபாளையம் பஞ்சாயத்து, சிங்காரத் தோப்பில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, பஞ்சாயத்து சார்பில், போர்வெல் அமைக்கப்பட்டது. அதில், 655 அடி ஆழத்தில், இரு இன்ஞ் அளவு தண்ணீர் வந்ததால், மோட்டார் வைத்து, தண்ணீர் எடுத்து, மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், நேற்று மாலை, அங்குள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம், பூஜை செய்து, அன்னதானம் வழங்கி, அப்பகுதி மக்கள் கொண்டாடினர்.