அரியலூர் அருகே தேர் கவிழ்ந்து 4 பேர் காயம்
ADDED :3094 days ago
பெரம்பலூர்: -அரியலூர் அருகே, அச்சு முறிந்து தேர் கவிழ்ந்ததில், எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடைபெற்றது. 40 அடி உயரமுடைய மரத்தால் ஆன தேரில், அம்மன் எழுந்தருளினார், தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேர் மடத்துத் தெருவில் சென்று கொண்டிருந்த போது, தேரின் முன் சக்கரத்தில் உள்ள அச்சு முறிந்தது. இதனால், தேர் முன்பக்கமாக சாய்ந்தது. இதனால், அருகிலிருந்த பக்தர்கள் அலறி
ஓடினர். இதில், 50 வயதான கோவில் பூசாரி, போலீஸ், எஸ்.ஐ., உட்பட, நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.