பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :3094 days ago
பழநி: பழநி சண்முகநதி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாகபூஜைகள் நடந்தது. மூலவர் பெரியாவுடையார் சன்னதிமுன் 108 சங்குகள், புனிதநீர் நிரம்பிய கும்பகலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. அதன்பின் மூலவருக்கு சங்குஅபிஷேகம், பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. உற்சவர்கள் சிவன், பார்வதி உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். பொங்கல், புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் அதிகாரிகள், பக்தர்கள் உட்பட பங்கேற்றனர்.