மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3095 days ago
வாலாஜாபேட்டை: அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தையொட்டி, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள நந்தி பகவான் மேல் காட்சி தரும் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு, நேற்று சிறப்பு ஹோமத்துடன் மஹா
அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரினசம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மரகதேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.