பாண்டி மூனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3095 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாண்டி மூனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாபூர்ணா ஹூதி, வாஸ்துசாந்தி, மிருத்ஸக்சனம், அங்குரார்பணம், மஹாபூர்ணாஹூதி, யாத்ராதானம் யாகசாலை பூஜையுடன் கடம் புறப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தீபாராதனை நடந்தது. பாண்டி முனீஸ்வர சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.