உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம்

அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த கந்துகால்பட்டி தீபாஞ்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட கந்துகால்பட்டி தீபாஞ்சியம்மன் கோவில் திருவிழா, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதில், கந்துகால்பட்டி, அதியமான்கோட்டை, மாதேமங்கலம், முத்தம்பட்டி, வேப்பமரத்தூர், பழைய இண்டூர்
உட்பட, 28 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி வழிபடுவர்.

நடப்பாண்டு திருவிழா, கடந்த, 27 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை, 8:00 மணிக்கு, பூக்கூடை எடுத்தல் மற்றும் சக்தி அழைத்தல் நடந்தது. மாலை,
4:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. 28 காலை, 5:00 மணிக்கு தீபாஞ்சியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை, 5:00
மணிக்கு, கரகம் அழைக்கப்பட்டது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர். 2:00 மணிக்கு தீபாஞ்சியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாலை, 3:00
மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, மாலை, 5:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 28 ஊர் தலைவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !