உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வசந்த உற்சவம்: காஞ்சி வரதர் குதிரை வாகனத்தில் பவனி

வசந்த உற்சவம்: காஞ்சி வரதர் குதிரை வாகனத்தில் பவனி

காஞ்சிபுரம்: வரதராஜப்­பெருமாள் கோவில் வசந்த உற்சவத்தில் நேற்று மாலை , பெருமாள் குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த உற்சவம், 22ம் தே தி துவங்கியது. தினமும் மாலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவடி கோவில் வரை சென்றுவந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில், நேற்று காலை, 10:00 மணிக்கு பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடை பெற்றது. மாலை , 5:30 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து, வாகன மண்டபத்திற்கு ஏகாந்த சேவையில் புறப்பட்டு சென்றார். குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்தபின், இரவு, 8:00 மணிக்கு பெருமாள் திருவடிக்கு தீர்த்தவாரி நடை பெற்றது. தொடர்ந்து, பெருமாள் மீண்டும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தி உலாத்தல் நடைபெற்றது. இரவு பெருமாள், தேவியர்களுடன் மூலவர் சன்னதிக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !