திருவாசகம் முற்றோதுதல்
ADDED :3096 days ago
வடமதுரை: வடமதுரையில் திருச்சி ரோட்டில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் பொலிவிழந்து காணப்படும்
இக்கோயிலில் திருப்பணி நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதுதல் திருவிழா ஏ.வி.பட்டி ரோடு தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருக்கழுக்குன்றம் சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜம்மாள் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், பழனிச்சாமி, ஊர் பிரமுகர்கள் அழகர்சாமி, கிருஷ்ணன், காமராஜ்,
டாக்டர் சேகர் பங்கேற்றனர்.