ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ADDED :3095 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு பூஜாரி கணேசன் தீபாராதனைகள் செய்தார். பின் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பூக்குழி, அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். 17 நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 6ல் பால்குடம், அக்னிச் சட்டி, இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. 7ல் பக்தர்கள் பூக்குழி இறங்குவர். 13ல் தேரோட்டம் நடக்கிறது. விழா காலங்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.