குரங்குப்பிடி என்பதன் பொருள் என்ன?
ADDED :3094 days ago
குரங்குப்பிடி என்பது சரணாகதி தத்துவத்தில் இடம்பெறும். மர்க்கடநியாயம் என இதற்குப் பெயர். தாய்க்குரங்கை குட்டி எப்படி தன் இரு கைகளால் கவ்விக் கொள்ளுமோ, அதுபோல, ஒரு பக்தன், தன் இஷ்ட தெய்வத்தின் திருவடியைச் சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டும்.