உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன்  கோலாகலமாக துவங்கியது.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டில் இடம்பெற்ற பழம் பெரும் கோயில் கூடலழகர் பெருமாள் கோயிலாகும். கோயிலின் வைகாசி விழாவை முன்னிட்டு இன்று(மே.31ல்) காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து , சுவாமி, நாச்சியாருடன் எழுந்தருள காலையில் கொடியேற்ற பூஜைகள் தொடங்கி, கொடியோற்றப்பட்டது. தினமும் காலை, இரவில் சுவாமி, நாச்சியாருடன் சிறப்பு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !