பழநி பத்ர காளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
பழநி: பழநி அருகே பெரியகலையம்புத்தூர் “ஐகோர்ட் பத்ர காளியம்மன் கோயில்” திருவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் ‘பூ’(தீ)க்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் ‘பூ’க்குழி இறங்கும் விழாவை முன்னிட்டு கொடியேற்றமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், பூஜைகள் 3நாட்களாக நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக ‘பூ’க்குழி இறங்கும் விழாவை முன்னிட்டு பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்து 200 பக்தர்கள் பிரத்யோகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ‘பூ’க்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி காளியம்மனை வழிபட்டனர். இதேப்போல மாவிளக்கு எடுத்தும், அங்கப்பிரதட்சனை செய்தும், நூற்றுக்கு மேற்பட்டபவர்கள் ‘கிடா’ வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது, சுற்றுப்புற கிரமாங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.