அதிகார நந்தி வாகனத்தில் தேனுபுரீஸ்வரர் வீதிஉலா
ADDED :3164 days ago
மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலின் பிரமோற்சவத்தை முன்னிட்டு, அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
செம்பாக்கத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரக, நாக தோஷம் உள்ளோர், இந்த கோவிலில் உள்ள சரபேஸ்வரரிடம் வேண்டி கொள்கின்றனர். இக்கோயிலில் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு 3 ம் நாள் விழாவில் அதிகார நந்தி வாகனத்தில் தேனுபுரீஸ்வரர், அம்பாளுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.