உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி செல்லத்தம்மன் கோயில் திருவிழா

வீரபாண்டி செல்லத்தம்மன் கோயில் திருவிழா

ஊமச்சிகுளம்: வீரபாண்டி செல்லத்தம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா நடக்கிறது. முதல் 2 நாட்களும் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருப்பாலையில் இருந்து அய்யனார் குதிரையில் அம்மன் புறப்பாடு நடந்தது. மேள, தாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட அய்யனார், குதிரையில் எழுந்தருளிய அம்மன் திருப்பாலை, பொறியாளர் நகர், ஊமச்சிகுளம் வழியாக வீரபாண்டிக்கு எடுத்து வந்தனர். நேற்று காலை பக்தர்கள் மாவிளக்கு வைத்தல், கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !