ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :3094 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், அனுக்ஞை , விக்னேஸ்வரர் பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் கோயிலில் கற்பக வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. விழாவில் தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.