சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தேர்த்திருவிழா
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. சேலம், கோட்டை அழகிரி நாதர் கோவிலில், தேர்த்திருவிழா மற்றும் பிரமோற்சவம் நிகழ்ச்சியை, நேற்று காலை, 11:00 மணிக்கு, அர்ச்சகர் சுதர்சன பட்டாச்சாரியார்
கொடியேற்றி தொடங்கி வைத்தார். காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை நடந்தது. பின், அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, அன்ன வாகனத்தில் கோவிலை சுற்றி பெருமாள் உலா வந்தார். இன்று மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனம், நாளை அனுமந்த வாகனம், 3ல், சேஷ வாகனம், 4 மதியம், 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். 5ல், யானை வாகனம், 6 மாலை, 6:00 மணிக்கு புஷ்ப வாகனம், 7ல், குதிரை வாகனங்களில்
உலா வருகிறார். 8ல், பெருமாள் தேர் மண்டபத்துக்கு செல்லுதல், அன்று மதியம், 2:00 மணிக்கு வண்டி கால உற்சவம், 9 காலை, 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 10ல் சத்தாபரணம்
நடக்கிறது. 11 மாலை, 6:00 மணிக்கு வசந்த உற்சவம் நடைபெறும்.