உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரசுவாமி வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

விஸ்வேஸ்வரசுவாமி வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

திருப்பூரில் பிரசித்தி பெற்று விளங்கும் திருத்தலங்களான ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்றிரவு, ஈஸ்வரன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று மாலை, 6:00 மணியளவில், புண்யாக வாசனம், மிருத்சங்கிரனம், அங்குரார்ப்பனம் ஆகிய பூஜைகளை தொடர்ந்து, ரக்ஷா பந்தனம் எனப்படும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரிஷப யாகம், அபிஷேகத்தை தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. கோவில் முன்பகுதியில் துவங்கி, தேரோடும் வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய ஜவுளிக்கடை வீதி, அரிசிக்கடை வீதி வழியாக, சுவாமி திருவீதியுலா நடந்தது. இன்று, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, காலை 10:00 மணியளவில், சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும், இரவு, 7:00 மணிக்கு, தேச மங்கையர்கரசி பங்கேற்கும், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !