சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம்
சிங்கம்புணரி, சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு 2 ம் திருவிழாவான நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருகிறார். 5ம் மண்டகப்படியான நேற்று மாலை 6:30 மணியளவில் சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலையில் பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் ஸர்ப்ப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 6 ம் மண்டகப்படியான இன்று ஜூன் 2ம் தேதி கழுவன் திரு விழாவும், 9ம் திருவிழா அன்று தேரோட்டமும், 10 ம் திருவிழா அன்று பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.