திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :3093 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக விளங்குகிறது.
ஜூன் 4 அன்று காலை 7:00 - 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனையொட்டி ஆசார்யாள் அழைப்பு, எஜமான அனுக்ஞை, மகாசங்கல்பம், புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், வேதிகா அலங்காரம் உள்ளிட்டவை நடந்தது. மாலை 5:00 மணியளவில் மேதினி பூஜை, அங்குரார்ப்பணம், அக்னி ப்ரணயனம், கும்பபூஜை, ரக் ஷாபந்தனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.