காமாட்சியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :3092 days ago
அனுப்பர்பாளையம் : திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோவில், 47வது ஆண்டு பொங்கல் விழா, கடந்த, 29ல், கிராம சாந்தியுடன் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு அலங்கார பூஜை, தீபாராதனை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, பக்தர்கள், முதுகில் அலகு குத்தி, தேரை இழுத்து வந்தனர். பெண்கள், மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.