உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

கன்னிமாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

புதுார், மதுரை புதுார் விஸ்வநாதநகர் கன்னிமாரியம்மன் கோயில் மற்றும் சப்த கன்னிமார்கள் கோயில் 21ம் ஆண்டு வைகாசி உற்சவ விழா நடந்தது. முதல் நாள் காலையில் விக்னேஷ்வரர் பூஜை, ஹோம கலச பூஜை முடிந்து அம்மன், கன்னிமார்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மே 26 காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் முடிந்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பால்குடம், முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தலைவர் சுகுமாறன் தலைமையில் செயலாளர் மணிமாறன், பொருளாளர்கள் சீனிவாசன், சுந்தர், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !