உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பணசாமி, பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

கருப்பணசாமி, பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே ஒருவானேந்தல் ஸ்ரீகருப்பணசாமி, பைரவர் கோயில் கும்பாபிஷேகம் துாத்துக்குடி அனல்மின் நிலைய கான்ட்ராக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், ஆறு கால யாக கால பூஜை
களுடன், விசேஷ சந்தி, தீபாராதனை நடந்தது. ராஜகோபுரங்களில் உள்ள கும்பங்களில் கலச நீர் ஊற்றப்பட்டு, மூலஸ்தான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !