விநாயகர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்
ADDED :3092 days ago
சூரமங்கலம்: சேலம், ஜங்சன் அருகே, ஜாகிர் ரெட்டிப்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 4ல் நடக்கிறது. ஜாகிர் ரெட்டிப்பட்டி, இன்ஜினியர் காலனியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டி, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால் வரும், 4ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை (ஜூன், 3) காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரஹ ஹோமங்கள், 10:30 மணிக்கு கோபுர கலச அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு, 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெறும். வரும், 4 அன்று காலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, 8:00 முதல் 9:00 மணிக்குள் செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.