வரதராஜர் பிரம்மோற்சவம் கருட சேவைக்கு விடுமுறை
ADDED :3092 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவை விழாவிற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம் ஜூன், 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும், ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளும் பெருமாள், நான்கு ராஜவீதிகளில் பவனி வருவார். இந்த உற்சவத்தில், மூன்றாம் நாள் கருடசேவை அன்று, ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு வரும், 8ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், 10ல், அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.