உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா

விழுப்புரம்,: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவி லில், பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரமேற்சவத்தை யொட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. இதையடுத்து இரவு 7:00 மணிக்கு, பெருமாள் அம்ச வாகனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 8 ம் தேதி வரை சிம்மம், அனுமந்தம், சேஷ, கருடன், யானை ஆகிய வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. மேலும், 7 ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி காலை 6.00 மணிக்கு திருத்தேர் மகோற்சவம், மாலை 5:00 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !