ராதாபுரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3091 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், ராதாபுரத்தில் ஆறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் சக்தி வினாயகர், சித்தி வினாயகர், ரேணுகாம்பாள், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, பூரணி புஷ்கலை சமேத அய்யனாரப்பன் ஆகிய ஆறு கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 8:40 மணியளவில், பனையபுரம் கணேசன் குருக்கள், முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள் ஆகியோர் தலைமையில், கும்பாபிஷேகம் செய்தனர்.