திருநெல்வேலி கைலாசநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3091 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் கைலாசபுரம் கைலாசநாதர் சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாளான்று வியாழன்,பச்சை சாத்தி செப்பு சப்பரம், பூங்குயில் சப்பரம், மாலையில் பாரிவேட்டை வெட்டுங்குதிரை, கங்காளநாதர் செப்பு சப்பரம் ஆகியன வீதி உலா வந்தன. 9 ம் நாளான இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருக்கோயிலின் 4 ரத வீதிகளிலும் உலா வந்தது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் விழாவையொட்டி தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.