திருவெற்றியூர் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்
ADDED :3087 days ago
திருவாடானை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் ரூ.40 லட்சம் வசூல் ஆனது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் உள்ள 8 பிரார்த்தனை உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.21 லட்சத்து 81 ஆயிரம், தங்கம் 732 கிராம், வெள்ளி 1 கிலோ, 265 கிராம் இருந்தது. மொத்தமதிப்பு ரூ.40 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், இந்து அறநிலைய துறை ஆய்வாளர் சங்கையா, கவுரவ கணகாணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.