உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபை ஐயப்பன் கோயிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை விழா

வல்லபை ஐயப்பன் கோயிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை விழா

கீழக்கரை: ரெகுநாதபரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தங்க கொடி மரம் பிரதிஷ்டை விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் 2005 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

12 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருப்பணியை முன்னிட்டு மூலஸ்தானம் முழுவதும் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவர்களான வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சள் மாதா ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமத்திற்கு பின்னர் நேற்று காலை 10:00 மணிக்கு தேக்குமரத்தால் ஆன 33 அடி உயரம் கொண்ட கொடிமரம் சன்னதி முன்பு நடப்பட்டது. கோயில் குருசாமி மோகன்சாமி கூறுகையில், வரும் செப்., 15 அன்று சபரிமலை தலைமை குருக்கள் கண்டரு ராஜுவரு தந்தரியால் கும்பாபிஷேகம் நடக்கிறது, என்றார். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !