உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரிகாத்த ராமர் கோவில் தேர் புதுத்துணியால் அலங்கரிக்கப்படுமா?

ஏரிகாத்த ராமர் கோவில் தேர் புதுத்துணியால் அலங்கரிக்கப்படுமா?

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் திருத்தேர் அலங்காரத்திற்கு, புதுத் துணிகளைப்பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது நடைபெறும் திருத்தேர் பவனி மிகவும் கோலாகலமாக இருக்கும். மாவட்டம் முழுதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரள்வர். இந்த ஆண்டின் திருவிழாவிற்கான கொடியேற்றம் அடுத்த மாதம் ,2ம் தேதி அன்று ந டைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருத்தேர் பவனியன்று, தேரை அலங்கரிக்க பழைய துணிகளைப்பயன்படுத்தாமல், புதுத் துணிகளைப்பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து இந்துமுன்னணியினர் நிர்வாகத்திடம் கோரிக்கை அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !