பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 75 திருமணங்கள்
ADDED :3083 days ago
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று ஒரே நாளில், 75 திருமணங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டத்தில், பவானி சங்க மேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஒவ்வொரு முகூர்த்தத்தின் போதும், பல திருமணங்கள் நடக்கும். நேற்று வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் வந்ததால், கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.கோவில் நிர்வாகத்தில் பதிவு பெற்ற, 35 திருமணங்கள், வேதநாயகி சன்னிதி, சங்கமேஸ்வரர் சன்னிதி, முருகன் சன்னிதி மற்றும் ஆதிகேசவபெருமாள் கோவில் மண்டபம் என, பல இடங்களில் நடந்தது. அதேபோல், சங்க மேஸ்வரர் கோவில் வெளிப் பகுதியான கூடுதுறையில், 40 திருமணங்கள் நடந்தன. ஒரே நாளில், மொத்தம், 75 திருமணங்கள் நடந்தன. திருமண வீட்டார்களின் கூட்டத்தால், கோவிலில் மக்கள்
வெள்ளம் நிறைந்து காணப்பட்டது.