உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் புரனமைப்பு செய்யப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பின், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜை, 6:00 மணிக்கு பூர்ணாகுதி ஆகியவற்றை தொடர்ந்து, 7:00 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. 8:00 முதல், 8:30 மணி வரை, மூலவர், மரகதாம்பிகை, விநாயகர், முருகன், கொடி
மரம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !