திருவாதவூர் திருமறைநாதர் கோயில் திருக்கல்யாணம்
ADDED :3073 days ago
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திருமறைநாதர், வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பேஷ்கார் பகவதி உள்ளிட்ட அறநிலையத்துறையினர் பங்கேற்றனர். இன்று (ஜூன் 6) தேரோட்டம் நடக்கிறது.