உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருவாலங்காடு: சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்து உள்ளது. இக்கோவிலுடன் இணைந்தது, பழையனுார் சாலையில் அமைந்துள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவில். இக்கோவிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2020ல் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆறு மாதமாக கோவில் சீரமைப்பு பணி நடந்தது. நவ., 3ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, கடந்த 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. பின், காலை 7:20 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருவாலங்காடு, பழையனுார் கிராமங் களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !