உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மையசுவாமி, பல்லகுண்டம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

பொம்மையசுவாமி, பல்லகுண்டம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசுவாமி, பல்லகுண்டம்மாள் கோயில் 12-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் புனித இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தகுடங்கள் தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. கும்பாபிேஷக விழாவில் மரிக்குண்டு பட்டக்காரர் வேலுச்சாமி, பூசாரி பொன்ராஜ் மற்றும் சீனி  தலைமை வகித்தனர். ராஜகம்பளத்து சமுதாய பங்காளிகள், சம்பந்தகாரர்கள் முன்னிலை வகித்தனர். ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய வழக்கப்படி மந்திரங்கள் கூறப்பட்டு, புனித நீரை கும்பத்தில் ஊற்றி அபிேஷகம் செய்தனர்.

கோபுர கலசம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. ஊருக்குள் உள்ள  பொம்மையசுவாமி, பல்லக்குண்டம்மாள் கோயில்களில் 2-ம் ஆண்டு கும்பாபிேஷக விழாவும் இதனை தொடர்ந்து, பரமசிவன் பார்வதி கோயில் சுவாமி கும்பிடுதல் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நடந்த தம்பிரான் உற்சவ விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைமாடுகளின் தம்பிரான் ஓட்டம் நடந்தது. பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த ஊர் பட்டக்கார நாயக்கர்கள், பூசாரி நாயக்கர்கள், கம்பிளிநாயக்கர்கள், கோடிய நாயக்கர்கள், ஊர்பெரிய தனக்காரர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பிறந்த வீட்டுப்பிள்ளைகள், மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !