உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தேரோட்டம்

தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தேரோட்டம்

சேத்துார்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக  விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சுற்றியுள்ள பகுதியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தனர்.

இக்கோயில் வைகாசி விசாக விழா  கடந்த மே 29 ல்  கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு  நாதஸ்வர கச்சேரி, இசை நிகழ்ச்சி மற்றும் சுவாமி , அம்பாளும் விதவிதமான அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். விழாவின்  முக்கிய நிகழ்ச்சியாக  நேற்று  தேரோட்டம் நடைப்பெற்றது.   காலை 10:00 மணிக்கு சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையினர் பஞ்சவாத்தியங்கள் முழங்க நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி பிரியா விடை அம்மனுடன் பெரிய தேர், தவம் பெற்ற நாயகி சிறிய தேரிலும்  எழுந்தருள பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் தேர்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து   வேண்டுதலை நிறைவேற்றினர்.    ஏற்பாடுகளை சேத்துார் ஜமீன் குடும்பத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !