ஜெனகை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்
ADDED :3089 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடக்கின்றன. ஒன்பதாவது நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பால் பிள்ளை தொட்டிகட்டியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், இன்று பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, கணக்கர் பூபதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.