ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3349 days ago
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நேற்று, காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், தேன் உள்பட
பல்வேறு அபிஷேக பூஜைகள் நடந்தன. மேலும், மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், பேளூர்
தான்தோன்றீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவில் சிவன் ஆகிய கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.