ராசிபுரம் வெங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :3053 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் நாடார் குடியிருப்பு பகுதியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில், நாளை (ஜூன், 8) மகா
கும்பாபிஷேகம், காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, இன்று, காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, தீபாரானை, அஷ்டபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நாளை, இரண்டாம் கால பூஜையுடன், மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.