திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி திருவிழா
ADDED :3081 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினமும் நடந்தது. நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி யில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சிநேகவல்லிதாயாரும் கோயில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவில் சுவாமி வீதி உலாவும் கலைநிகழ்ச்சியும் நடந்தது.